சூப்பர் ஹிட்டான விஜய்யின் ‘மாஸ்டர்’… ரிலீஸானது ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்’ பாடல்!
January 15, 2021 / 10:57 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.
இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். இவர்களுடன் முக்கிய ரோல்களில் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ஷாந்தனு, தீனா, நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம் குமார், கௌரி கிஷன், மகேந்திரன், ரம்யா, ஸ்ரீமன், ரமேஷ் திலக், சேத்தன் நடித்துள்ளனர்.
விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த இப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும், நேற்று (ஜனவரி 14-ஆம் தேதி) ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது. தற்போது, படத்தின் ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்’ பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த பாடல் விஜய் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.