தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.
இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர்.
சமீபத்தில், படத்தினை பார்த்த சென்சார் குழு ‘யு/ஏ’ சர்டிஃபிகேட் அளித்தது. படத்தை பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஜனவரி 13-ஆம் தேதியும், ஹிந்தியில் (விஜய் தி மாஸ்டர்) ஜனவரி 14-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, ‘மாஸ்டர்’ படத்துக்கென ஸ்பெஷல் ட்விட்டர் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. இந்த எமோஜியை #MasterFilm, #MasterPongal, #மாஸ்டர், #మాస్టర్, #VijayTheMaster போன்ற ஹேஸ்டேக்குகளில் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளதாம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.