விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த வெற்றி!

  • October 15, 2020 / 10:09 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இவர்களுடன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஜெரெமையா,அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” என்ற பாடல் யூடியூபில் மிகவும் பிரபலமடைந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டரில் அதிகம் பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் ஷேர் செய்து இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் போஸ்டர் தான் இவ்வளவு அதிகம் பார்வையாளர்களை கொண்டது என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus