தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்த படத்தில் ஸ்டன்ட் இயக்குநராக சில்வா பணியாற்றியுள்ளார். தற்போது, ஸ்டன்ட் இயக்குநர் சில்வா அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘மாஸ்டர்’ படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பற்றி பேசியுள்ளார். இப்படத்தில் ஆறு மாஸான சண்டைக் காட்சிகள் இருக்கிறதாம். அனைத்து சண்டைக் காட்சிகளுமே ரொம்ப ரியலிஸ்டிக்காக இருக்குமாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ரிஸ்க் எடுத்து நடித்து அனைவரையும் அசத்தினாராம்.