தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. இந்தப்படத்தை கைதி படம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். ஏப்ரல் மாதம் வெளியிடவிருந்த இந்த திரைப்படம் கொரோனா லாக்டோன் காரணமாக தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த படம் OTTயில் வெளிவரும் என்ற தகவல் பரவி வந்தது. இதைப்பற்றி இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜேவ்யர் பிரிட்டோ ஒரு நேரலையில் விளக்கம் தெரிவித்துள்ளார்.
“மாஸ்டர்” போன்ற பெரிய திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது. அதனால் இந்த படத்தை OTTயில் வெளியிடுவதற்கான எந்த நோக்கமும் இல்லை என்று அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் மாஸ்டர் திரைப்படம் வருகிற தீபாவளி அன்றோ, அல்லது 2021 பொங்கலன்றோ வெளியிடப்படும் என்ற செய்தியையும் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் தளபதி விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரிமியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் பாடல் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த படம் எப்போது வெளியாகும் என்று தற்போது தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.