‘மாஸ்டர்’-யில் அந்த நடிகரின் கேரக்டர் ஸ்கெட்ச் இது தான்… வெளியானது முக்கியத் தகவல்!

  • August 11, 2020 / 10:48 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ஏற்கனவே, இந்த படத்தில் நடிகர் மகேந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் டீன் ஏஜ் ரோலில் தான் மகேந்திரன் நடித்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும், மகேந்திரன் நடித்துள்ள காட்சிகளுக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியே டப்பிங் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus