பொங்கலுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ்… கன்ஃபார்ம் பண்ண தயாரிப்பு நிறுவனம்!

  • December 29, 2020 / 03:07 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர்.

சமீபத்தில், படத்தினை பார்த்த சென்சார் குழு ‘யு/ஏ’ சர்டிஃபிகேட் அளித்தது. தற்போது, படத்தை பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், படத்தின் செம மாஸான போஸ்டர் ஒன்றையும் ரிலீஸ் செய்துள்ளது. இதனால் ‘தளபதி’ விஜய்யின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus