முதல்வரை சந்தித்த விஜய்… ‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் ட்வீட்!
December 28, 2020 / 05:20 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். படத்தின் ட்ரெய்லரை வருகிற ஜனவரி 1-ஆம் தேதி நியூ இயர் ட்ரீட்டாகவும், படத்தை பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 13-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விஜய் நேரில் சந்தித்து திரையரங்குகளில் 100% ஆடியன்ஸ் அமர அரசாங்கம் அனுமதி கொடுப்பது தொடர்பாக பேசியுள்ளார். இதனையடுத்து இன்று காலை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், ‘மாஸ்டர்’ கன்ஃபார்ம்மாக பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறினார். இப்போது, ரிலீஸ் தொடர்பான அப்டேட்டை நாளை 12:30 pm-க்கு அறிவிக்கப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.