தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில், பிரபல OTT நிறுவனமான ‘அமேசான் ப்ரைம்’-யில் வருகிற நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘மாஸ்டர்’ ரிலீஸாகவுள்ளதாக குறிப்பிட்டு ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ‘மாஸ்டர்’ படக்குழுவினர் தரப்பில் விசாரித்த போது “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறினார்கள். சமீபத்தில், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ அக்டோபர் 30-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.