தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர்.
ஏற்கனவே, பிரபல OTT நிறுவனமான ‘அமேசான் ப்ரைம்’ இதன் டிஜிட்டல் ரைட்ஸை ரூ.20 கோடிக்கு வாங்கியிருந்தது. தற்போது, அமேசான் நிறுவனம் மேற்கொண்டு ரூ.100 கோடி கொடுத்தால் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல், OTT-யில் வெளியிடலாம் என்று ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் லலித் குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த டீல் முடிந்தால் கன்ஃபார்ம்மாக ‘மாஸ்டர்’ ‘அமேசான் ப்ரைம்’-யில் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகுமாம்.