லீக்கானது விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் முக்கிய காட்சிகள்… ஷாக் மோடில் படக்குழுவினர்!

  • January 12, 2021 / 11:51 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர். கடந்த ஆண்டு (2020) நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர்.

சமீபத்தில், படத்தினை பார்த்த சென்சார் குழு ‘யு/ஏ’ சர்டிஃபிகேட் அளித்தது. படத்தை பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நாளையும் (ஜனவரி 13-ஆம் தேதி), ஹிந்தியில் (விஜய் தி மாஸ்டர்) ஜனவரி 14-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் சில முக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் லீக்காகி தீயாய் பரவி வருகிறது. இதனால் ஷாக்கான ‘மாஸ்டர்’ டீம், லீக்கான காட்சிகளை ஷேர் செய்ய வேண்டாம் என ட்விட்டரில் கூறியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus