வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்… ‘மாஸ்டர்’ ட்ரெய்லர் ரிலீஸாகுமா? ஆகாதா?

  • January 2, 2021 / 09:27 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர். கடந்த ஆண்டு (2020) நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர்.

சமீபத்தில், படத்தினை பார்த்த சென்சார் குழு ‘யு/ஏ’ சர்டிஃபிகேட் அளித்தது. படத்தை பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஜனவரி 13-ஆம் தேதியும், ஹிந்தியில் (விஜய் தி மாஸ்டர்) ஜனவரி 14-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், பாடல்கள் மற்றும் டீசரை தொடர்ந்து ட்ரெய்லர் ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு பேட் நியூஸ். செம மாஸாக ட்ரெய்லரை எடிட் செய்து வைத்திருக்கும் படக்குழு, அதை ரிலீஸ் செய்ய வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus