விஜய்யுடன் கூட்டணி அமைக்கப்போகும் கார்த்தி பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • May 3, 2021 / 06:20 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

சமீபத்தில், இந்த படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஜய்-யின் 67-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில், சென்னையில் விஜய்யை சந்தித்து வம்சி சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். “முழு ஸ்க்ரிப்டையும் முடித்து விட்டு வந்து சொல்லுங்க” என்று வம்சியிடம் விஜய் சொல்லியிருக்கிறாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus