விஜய்யுடன் கூட்டணி அமைக்கப்போகும் பிரபாஸ் பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • March 30, 2021 / 05:33 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்க உள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறாராம். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஜய்-யின் 67-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்தினை ‘கே.ஜி.எஃப்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இப்போது பிரஷாந்த் நீல், யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ மற்றும் பிரபாஸின் ‘சலார்’ என இரண்டு படங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus