Thalapathy 69 : ‘தளபதி 69’-க்காக ராஜமௌலி பட தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் விஜய்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • January 24, 2024 / 11:23 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘லியோ’ கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-ஐ (The Greatest of all Time) பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்குகிறார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் வலம் வரப்போகிறார், ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட மூன்று போஸ்டர்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் 69-வது படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘RRR’ படத்தை தயாரித்த D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, விஜய்யின் ‘வாரிசு’ படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus