விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பூவே உனக்காக’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • April 29, 2022 / 06:16 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பூவே உனக்காக’. இந்த படத்தினை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரமன் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சார்லி, சங்கீதா, அஞ்சு அரவிந்த், நம்பியார், நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். 1996-ஆம் ஆண்டு வெளி வந்த இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.9.38 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus