Vijay & Theri : சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • February 20, 2024 / 02:16 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் நடித்த ‘லியோ’ கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் வலம் வரப்போகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தெறி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லீ இதனை இயக்கியிருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் இயக்குநர் மகேந்திரன், எமி ஜாக்சன், ராதிகா சரத்குமார், பேபி நைநிகா, மொட்ட ராஜேந்திரன், பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் விஜய் ரூ.25 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus