“என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்” – தளபதி விஜய்!

  • June 13, 2020 / 04:12 PM IST

நடிகர் விஜய் தன் பிறந்தநாளையொட்டி நடக்கவிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும் ,சமுதாய நல செயல்பாடுகளையும், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்குமாறு தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவர் தனது 46வது பிறந்தநாளை வருகிற ஜூன் மாதம் 22ஆம் தேதி கொண்டாடவிருக்கிறார்.

இதையடுத்து அவரது ரசிகர்கள் பலர், கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும் சமுதாய நலத் திட்டங்களையும் அவர் பிறந்த நாளன்று செய்வதற்கு ஏற்கனவே சமூக வலைதளங்களில் முடிவு செய்துள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிறுத்தி வைக்குமாறு தனது ரசிகர்களிடம் தற்போது விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய் ரசிகர் மன்ற தலைவர் என்.ஆனந்த் இதே செய்தியை விஜய் ரசிகர்களிடம் மாநிலம் முழுவதும் கூறியுள்ளார்.

விஜய் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் “மாஸ்டர்” படத்தின் டிரைலரை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் அதை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தளபதி விஜய் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய் ஒரு கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் மற்றும் கௌரி கிஷன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படயிருந்த இந்த திரைப்படம் கொரோனவைரஸ் லாக்டவுன் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியிடப்படும் என்று திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.

இதை அடுத்து விஜய் பிறந்தநாள் CDP இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்கள் .இதை அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus