தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இப்படம் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸானது.
‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படமான ‘வாரிசு’வை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.
விஜய்-யின் 67-வது படத்தை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கவிருக்கிறார். சமீபத்தில், இப்படத்துக்கான பூஜை போடப்பட்டது. மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பமாகவிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இயக்கவிருக்கிறார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் விஜய்-க்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.