அடேங்கப்பா… ‘பிகில்’ படத்தில் நடிப்பதற்காக விஜய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பிகில்’. இயக்குநர் அட்லி இயக்கியிருந்த இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். முக்கிய ரோல்களில் நயன்தாரா, விவேக், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்துக்காக விஜய் ரூ.50 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.