அடேங்கப்பா… வம்சியின் ‘வாரிசு’ படத்துக்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘வாரிசு’ படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு தமன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்த ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக இப்படத்தின் மூன்று போஸ்டர்களை ரிலீஸ் செய்தனர்.

இம்மூன்று போஸ்டர்ஸும் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்துக்காக நடிகர் விஜய்-க்கு ரூ.118 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.