Vijay & The Greatest of all Time : ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி… வைரலாகும் வீடியோஸ்!

  • February 5, 2024 / 11:22 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘லியோ’ கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-ஐ (The Greatest of all Time) பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்குகிறார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் வலம் வரப்போகிறார், ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, மைக் மோகன், ஜெயராம், லைலா, அஜ்மல், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட மூன்று போஸ்டர்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் “‘தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு” என்று கூறியிருந்தார்.

தற்போது, ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் செல்ஃபி எடுத்த வீடியோஸ் வெளியாகியுள்ளது. இந்த வீடியோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus