தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார்.
சமீபத்தில், ‘அரபிக் குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’, ‘பீஸ்ட் மோட்’ ஆகிய 3 பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இம்மூன்று பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
இந்நிலையில், ‘பீஸ்ட்’டுக்காக நெல்சன் விஜய்யை எடுத்த ஸ்பெஷல் பேட்டி நேற்று இரவு சன் டிவியில் ஒளிபரப்பானது. இந்த பேட்டியில் விஜய்யிடம் “கடந்த ஆண்டு (2021) தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தபோது ஏன் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று வாக்களிச்சீங்க?” என்று நெல்சன் கேள்வி கேட்டார். அதற்கு விஜய் “என்னோட வீட்டுக்கு பின்னாடி தான் அந்த வாக்குச்சாவடி இருந்துச்சு. நான் வீட்ல இருந்து கிளம்பி வெளிய வரும்போது சைக்கிளை பார்த்ததும், என்னோட பையன் சஞ்சய் நியாபகம் வந்துச்சு உடனே எடுத்துட்டு போய்டேன் அவ்ளோதான்.
ஆனா, நான் போயிட்டு வந்த பிறகு சஞ்சய் என்கிட்ட போன்ல பேசுனான். அப்பா நீங்க சைக்கிள்ல போனீங்கன்னு நியூஸ்ல பார்த்தேன். என் சைக்கிளுக்கு ஒன்னும் ஆகலையே-ன்னு கேட்டான். உடனே நான் சொன்னேன், டேய் நான் அந்த கூட்டத்துக்குள்ள போயிட்டு முழுசா வீடு திரும்பினதே பெரிய விஷயம். நீ சைக்கிள் எப்படி இருக்குன்னா கேக்குற போன வைடான்னு சொன்னேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.