விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ‘தளபதி’க்கு சிலை… அசத்திய கர்நாடக மாநில ரசிகர்கள்!

  • July 26, 2021 / 12:40 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிவடைந்தது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய ஷெடியூல் ஷூட்டிங் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூலை 25-ஆம் தேதி) பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் கர்நாடக மாநில ரசிகர்கள் சார்பில் ‘தளபதி’யின் முழு உருவ சிலை வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus