தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் விஜய்யுடன் டூயட் ஆடி பாடப்போவது பூஜா ஹெக்டே என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது, இப்படம் தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜை சந்தித்து பேசிய விஜய், இந்த படத்திலும் மாஸ்டரை போல வில்லனுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து அவருடைய படமாக மாற்றி விட வேண்டாம் என்று கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முக்கியமாக ஹீரோவாக நடித்து வரும் நடிகர்களை வில்லனாக நடிக்க வைக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாராம் விஜய். லோகேஷ் இயக்கிய முந்தைய படமான மாஸ்டரில் ஹீரோ விஜய்யை விட வில்லன் விஜய் சேதுபதிக்கே அதிக ஸ்கோப் கொடுத்து அது மக்கள் செல்வனின் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் விஜய் இந்த மாதிரி ஒரு கண்டிஷனை போட்டுள்ளாராம்.