திடீரென அட்லியை நேரில் சந்தித்து பேசிய விஜய்… தீயாய் பரவும் வீடியோ!

  • December 4, 2020 / 06:09 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். படம் பொங்கல் ஸ்பெஷலாக அடுத்த மாதம் (ஜனவரி) 13-ஆம் தேதி ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது என கடந்த சில மாதங்களாக தகவல் வந்த வண்ணமிருந்தது. பின், திடீரென இந்த படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார்.

அதன் பிறகு இப்படத்தினை இயக்குநர் நெல்சன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், இந்த படத்துக்கு இசையமைக்க ‘ராக்ஸ்டார்’ அனிருத் ஒப்பந்தமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் நேற்று இயக்குநர் அட்லியை நேரில் சந்தித்து பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. விஜய் – அட்லி மீண்டும் நான்காவது முறையாக கூட்டணி அமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்ததா? அல்லது அட்லி ரிலீஸ் செய்த ‘அந்தகாரம்’ படத்தை பார்க்க விஜய் சென்றாரா? என்று இவ்விரண்டு கேள்விகளும் எழுந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.