‘#9YearsOfThalaivaa”… ‘தளபதி’ விஜய் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • August 9, 2022 / 08:14 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘வாரிசு’ படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் விஜய்யின் கேரியரில் 67-வது படமாம். இதன் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தலைவா’. இந்த படத்தினை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இதில் விஜய்-க்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், பொன்வண்ணன், மனோபாலா, சந்தானம், அபிமன்யு சிங், உதயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இன்றுடன் (ஆகஸ்ட் 9-ஆம் தேதி) இந்த படம் வெளி வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘#9YearsOfThalaivaa’ என்ற ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த படம் உலக அளவில் ரூ.76.15 கோடி வசூல் செய்ததாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus