அடேங்கப்பா… 19 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • January 30, 2023 / 01:50 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். இவர் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது.

இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 19 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.276 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus