வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

  • June 21, 2022 / 06:15 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இப்படம் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸானது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார்.

இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு தமன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படத்துக்கு ‘வாரிசு’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளனர். இப்போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus