விஜய்யின் ‘வாரிசு’…. OST ரிலீஸ் தேதியை அறிவித்த இசையமைப்பாளர் தமன்!

  • August 1, 2023 / 02:07 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். இவர் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘வாரிசு’ படம் இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது.

இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்திருந்தார். இப்படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்திருந்தனர். இதற்கு தமன் இசையமைத்திருந்தார்.

இப்படம் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இதன் Original Background Score-ஐ வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus