சூப்பர் ஹிட்டான விஜய்யின் ‘வாரிசு’… வெளியானது ‘தீ தளபதி’ பாடல் வீடியோ!

  • February 6, 2023 / 01:50 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். இவர் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது.

இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற ‘தீ தளபதி’ என்ற பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus