தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. நேற்று இப்படம் சன் டிவியில் ஒளிபரப்பானது.
இதனால் விஜய் ரசிகர்கள் செம ஹேப்பியானார்கள். அவர்களை கூடுதலாக சந்தோஷப்படுத்தும் விதத்தில் ஒரு புகைப்படம் ஒன்று வெளியானது. பிரபல நடிகர் சஞ்சீவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தான் அது. நேற்று நண்பர்கள் தினம் என்பதால் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அனைவரும் ஸ்டேட்டஸ் போட்ட வண்ணமிருந்தனர்.
நடிகர் சஞ்சீவ், நடிகர் ‘தளபதி’ விஜய்யின் நண்பர். அந்த வகையில், நடிகர் சஞ்சீவ் நேற்று தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் விஜய்யும் இருந்ததால், அவரின் முகத்தை பார்த்து ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். விஜய் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Friends are family
pic.twitter.com/LLgozHLmeA
— Sanjeev (@SanjeeveVenkat) August 2, 2020
Maams @actorvijay pic.twitter.com/ZNVDsgQhQB
— Sanjeev (@SanjeeveVenkat) August 2, 2020