விஜய் – சாஹீன் கான் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘யூத்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘யூத்’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சாஹீன் கான் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வின்சென்ட் செல்வா இதனை இயக்கியிருந்தார். சூப்பர் ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.18.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.