தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தரராஜன், பயணங்கள் முடிவதில்லை, ராஜாதிராஜா, வைதேகி காத்திருந்தாள், என்கிட்ட மோதாதே போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியவராவார்.
இதை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் மகன் தீபக் சுந்தரராஜன் தன் முதல் படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் நடிகை டாப்ஸி பன்னு ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தற்போது செய்தி வந்துள்ளது.
மேலும் காமெடி ஜானரில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடிக்கிறாராம். மேலும் இந்த படத்தில் பல முன்னணி காமெடி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளார்களாம்.
தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் என்னவென்றால் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி இந்த படத்தில் நடிப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்பூரில் தொடங்கியுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.
தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பிரபல நடிகர் ஜெகபதிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் தற்போது இந்த படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம்.
தீபக் சுந்தரராஜன் ஏற்கனவே இயக்குனர் விஜய்யிடம் பல ஆண்டுகளாக துணை இயக்குனராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அடுத்த அதிகாரபூர்வமான தகவல் வருவதற்காக அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.