பிரபல தொலைக்காட்சி நடிகர் மற்றும் காமெடியனான வடிவேலு பாலாஜி மாரடைப்பால் திடீரென நேற்று காலமானார். 45 வயதான இவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காமெடி நடிகரான வடிவேலு பாலாஜி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அப்போது மாரடைப்பு காரணமாக பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு மேல் அங்கு சிகிச்சை எடுத்து வந்தும் எந்த பலனும் இன்றி சிகிச்சை எடுத்து வந்த நிலையில், கடைசியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது திடீர் மரணம் இவருடன் பணிபுரிந்தவர்கள் மட்டுமல்லாது சினிமா துறையை சேர்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி அவர்களும் தங்கள் இரங்கலை தற்போது தெரிவித்து வருகிறார்கள்.
பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிரபல நடிகர் விஜய் சேதுபதி சேத்துப்பட்டில் நடந்து வரும் வடிவேலு பாலாஜியின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவரது குடும்பத்திற்கு நிதி உதவியும் அளித்து உதவியுள்ளார். மேலும் வடிவேலு பாலாஜியின் ரசிகர்கள் உறவினர்கள் என பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.