டாப்ஸி திரைப்பட ஷூட்டிங்கில் இணையும் விஜய் சேதுபதி!

  • September 12, 2020 / 11:00 PM IST

தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தரராஜன், பயணங்கள் முடிவதில்லை, ராஜாதிராஜா, வைதேகி காத்திருந்தாள், என்கிட்ட மோதாதே போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியவராவார்.

இதை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் மகன் தீபக் சுந்தரராஜன் தன் முதல் படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் நடிகை டாப்ஸி பன்னு ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் செய்தி வந்தது.

மேலும் காமெடி ஜானரில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடிக்கிறாராம். மேலும் இந்த படத்தில் பல முன்னணி காமெடி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளார்களாம்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கி விட்டதாகவும் டாப்ஸி இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவதாகவும் தற்போது செய்தி வந்துள்ளது. மேலும் விரைவில் விஜய் சேதுபதி ஜெய்ப்பூரில் நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். இதுமட்டுமின்றி இந்தப்படத்தில் நடிகர் யோகிபாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus