கஷ்டப்படும் நடிகருக்கு நிதி உதவி செய்த விஜய் சேதுபதி!

  • November 17, 2020 / 09:56 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பண உதவி கேட்டு உருக்கமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட நடிகர் தவசிக்கு ஒரு லட்சம் ரூபாய் அளித்து உதவியுள்ளார்.

நடிகர் தவசி பல தமிழ் திரைப்படங்களில் உதவி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் “கருப்பன் குசும்பன்” என்ற வசனம் மூலம் பிரபலமான இந்த நடிகர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு பண உதவி இல்லாமல் தவித்து வந்தார்.

ஏற்கனவே நடிகர்கள் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் இவருக்கு பண உதவி செய்துள்ள நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியும் ரூபாய் ஒரு லட்சம் பண உதவி அளித்துள்ளார். இதை நடிகர் சௌந்தரராஜா மூலம் அவரிடம் சேர்த்துள்ளார் விஜய்சேதுபதி.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus