நிறைவு பெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு!

  • December 2, 2020 / 12:59 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “லாபம்”.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7சிஎஸ் சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தார்கள்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லாபம். இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன், கலையரசன், ஜெகபதிபாபு மற்றும் சாய் தன்ஷிகா நடிக்கிறார்கள்.

ராம்ஜி ஒளிப்பதிவில் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அந்தோணி இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்துள்ளார். செவன்.சிஎஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள்.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை கொண்டாடும் விதமாக விஜய் சேதுபதியுடன் படக்குழுவினர் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளார்கள். விரைவில் “லாபம்” திரைப்படத்தை குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus