விரைவில் வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதி பட டிரைலர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “லாபம்”. இந்த திரைப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லாபம். இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன், கலையரசன், ஜெகபதிபாபு மற்றும் சாய் தன்ஷிகா நடிக்கிறார்கள்.

ராம்ஜி ஒளிப்பதிவில் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அந்தோணி இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்துள்ளார். செவன்.சிஎஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள்.

ஏற்கனவே இந்த படத்தை குறித்து அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று செய்தி வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் தற்போது வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு விஜய் சேதுபதி நடிப்பில் “லாபம்” படத்தின் டிரைலர் வெளியாகும் என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

Share.