அருண் விஜய்-க்கு பதிலாக நடித்த விக்ரம்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • December 28, 2022 / 12:59 AM IST

சினிமாவில் எப்போது நாம் வெற்றி அடைவோம், எப்போது தோல்வி அடைவோம் என்பதை யாராலையும் கணிக்க முடியாது. இருப்பினும் தொடர்ந்து தோல்வி வந்தாலும், விடா முயற்சி செய்து தான் எதற்காக ஆசைப்பட்டோமோ, அந்த இலக்கை அடைவதற்கு தொடர்ந்து போராடினால், கண்டிப்பாக அதற்கு உண்டான பலன் கிடைக்கும். இதற்கு சரியான உதாரணம் நடிகர் அருண் விஜய்.

ஒரு பிரபல நடிகரின் மகனாக இருந்தும், ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும், அவர் தன்னம்பிக்கையுடன் போராடி தானும் ஒரு மகா நடிகன் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அருண் விஜய்யின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தான். ஹீரோ அஜித்துக்கு எதிரியாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் அருண் விஜய்.

‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அருண் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக அவரின் கால்ஷீட் டைரியில் ‘குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாஹோ, மாஃபியா : அத்தியாயம் ஒன்று, யானை, சினம்’ என படங்கள் குவிந்தது.

இந்நிலையில், அருண் விஜய் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 1999-யில் ரிலீஸான தமிழ் படம் ‘சேது’. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விக்ரம் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் பாலா நடிகர் அருண் விஜய்யையும் அணுகினாராம். பின், சில காரணங்களால் அருண் விஜய்யால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus