சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் 2’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
சமீபத்தில், விக்ரம் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். ‘தங்கலான்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்குகிறாராம்.
இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சேது’.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அபிதா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் பாலா நடிகர் முரளியை அணுகினாராம். பின், சில காரணங்களால் முரளியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.