சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் 2, தங்கலான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட இதன் டீசர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
பல வருடங்களாக இப்பட்டத்தின் ரிலீஸுக்காக விக்ரம் மற்றும் கெளதம் மேனனின் ரசிகர்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, இந்த படத்தை வருகிற மே 19-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.