பிரமாண்டமாக நடக்க இருக்கும் விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் !

  • May 10, 2022 / 08:11 PM IST

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. விக்ரம் படத்தை ஜூன் 3ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


இந்நிலையில் வருகின்ற மே 15-ஆம் தேதி இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக தகவல் வெளியானது . முன்னதாக இந்த படத்தின் முதல் பாடல் மட்டும் மே 11 -ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இந்நிலையில் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .மாலை 6 மணிக்கு இந்த விழா தொடங்க இருக்கிறது . அனிருத் முதன் முதலாக நடிகர் கமல்ஹாசன் படத்திற்கு இசையமைத்து உள்ளார் . மேலும் கமல் ஹாசன் இந்த படத்தில் ஒரு பாடல் பாடி இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது .

இதனால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . சமீபத்தில் வெளியான ரஜினி , அஜித் , சூர்யா , விஜய் ஆகிய முன்னணி நடிகர்களின் படம் ரசிகர்களிடம் பெரிதாக நல்ல வரவேற்பை பெறவில்லை இதனால் விக்ரம் படம் நன்றாக இருந்தால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்பலாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus