விக்ரம் படத்தின் ஓ.எஸ்.டி எப்போது வெளியாகும் ?

  • July 3, 2022 / 12:32 AM IST

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃ பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது . உலகம் முழுக்க இந்த படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது . பல இடங்களில் இந்த படம் புதிய சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

இந்நிலையில் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூலை நிகழ்த்தி உள்ளது. நேற்று விக்ரம் படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது விக்ரம் படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை தமிழ்நாட்டு ஷேர் மட்டும் 75 கோடியை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இந்த அளவுக்கு வசூல் பண்ணியது இல்லை.மேலும் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால் சத்தியமாக இவ்வளவு பெரிய ஹட் கொடுக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இன்னும் ஐந்து, ஆறு வாரங்களுக்கு விக்ரம் படத்தின் டிக்கெட் டிமாண்ட் உள்ளதாக உதயநிதி கூறினார்.இந்நிலையில் விக்ரம் படத்தை பார்க்க ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள் . இதனிடையே விக்ரம் படத்தின் ஓ.டி.டி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது . இதனால் வருகின்ற ஜூலை மாதம் 8ஆம் தேதி இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் விக்ரம் படத்தின் பின்னணி இசை மற்றும் தீம் இசை சில தினங்களில் வெளியாகும் என்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார் . இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus