விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’… 3 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • October 9, 2023 / 06:51 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவராஜ் தயாளன். இவர் இயக்கியுள்ள புதிய படம் ‘இறுகப்பற்று’. இந்த படம் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் விக்ரம் பிரபு, ஷ்ரதா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்ணதி, சானியா ஐயப்பன் ஆகியோர் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனை ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.4.28 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus