தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவராஜ் தயாளன். இவர் இயக்கியுள்ள புதிய படம் ‘இறுகப்பற்று’.

  • October 5, 2023 / 09:22 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவராஜ் தயாளன். இவர் இயக்கியுள்ள புதிய படம் ‘இறுகப்பற்று’. இந்த படத்தை ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் விக்ரம் பிரபு, ஷ்ரதா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்ணதி, சானியா ஐயப்பன் ஆகியோர் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை நாளை (அக்டோபர் 6-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியை பார்த்த சில பத்திரிக்கையாளர்கள் ‘இறுகப்பற்று’ டீமை பாராட்டி ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.

https://twitter.com/Karthikravivarm/status/1709268365578219887

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus