விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • June 24, 2023 / 08:08 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ நேற்று (ஜூன் 23-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ளார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் தனஞ்செயா, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சாகர் இசையமைத்துள்ள இதற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.33.62 லட்சம் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus