மரண மாஸ் லுக்கில் விக்ரம் !

  • February 18, 2023 / 07:00 PM IST

இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது . துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் கலையரசன் நடிப்பில் இந்த படம் வெளியானது .. பா.ரஞ்சித்தின் வழக்கமான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக டென்மா பணியாற்றினார் . நட்சத்திரம் நகருகிறது 31 ஆகஸ்ட் 2022 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் படம் இயக்கி வருகிறார் .

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரித்து வருகிறார் . தங்களான் என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார் கே.ஜி.எஃப் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறது . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வருகிறது . படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்களை

இந்நிலையில் நடிகர் விக்ரம் தங்களான் பட கெட்டப்பில் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் . இதில் செம மாஸாக இருக்கிறார் விக்ரம் . தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus