சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘தங்கலான்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்குகிறாராம். நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம்.
இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதில் பார்வதி, மாளவிகா மோகனன் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், மிக முக்கிய ரோல்களில் பசுபதி, டேனியல் கால்டாகிரோன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, படப்பிடிப்புக்கான ஒத்திகையின் போது நடிகர் விக்ரமிற்கு படுகாயம் ஏற்பட்டு, விலா எலும்பு முறிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் விக்ரம் குணமடையும் வரை ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டாராம்.
Thank you for all the love and appreciation #AdithaKarikalan aka #ChiyaanVikram has received and for the astounding response to #PS2 from all over the world. #Chiyaan sustained an injury during rehearsals resulting in a broken rib due to which he will not be able to join his… pic.twitter.com/za6u9IFm08
— Yuvraaj (@proyuvraaj) May 3, 2023