விக்ரம் – சூர்யா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ‘பிதாமகன்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?
March 28, 2022 / 02:28 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், விக்ரம் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்க உள்ளாராம். நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம். இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.
விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பிதாமகன்’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சங்கீதா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘சித்தன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து இன்னொரு டாப் ஹீரோவான சூர்யாவும் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் லைலா, மனோபாலா, கருணாஸ், மகாதேவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகப் பெரிய ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.20.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.